எடையை குறைத்து செம மாஸான லுக்கில் விஜய் சேதுபதி! எப்படி இருக்கிறார் பாருங்க
எந்தவொரு பின்புலமும் இல்லாமல் திறமையால் மட்டுமே முன்னுக்கு வந்தவர் விஜய் சேதுபதி.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தொடங்கி தற்போது முன்னணி நாயகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகன் என்பதையும் தாண்டி வில்லனாகவும் மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி.
இவர் நடிப்பில் வருடத்திற்கு குறைந்தது 3 படங்களாவது வெளியாகி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கடைசியாக இவர் நடித்த டிஎஸ்பி படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை, இதில் போலிஸ் அதிகாரியாக நடித்திருப்பார் விஜய் சேதுபதி.
நடிகராக மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் நல்ல குணத்துக்காகவே இவருடைய ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது, காரணம் எடையை குறைத்து செம மாஸான லுக்கில் கலக்குகிறார்.