அர்ச்சனாவை மறைமுகமாக தாக்கி பேசிய விஜய் சேதுபதி.. வெட்கத்தில் குறுகிய போட்டியாளர்
அர்ச்சனாவை மறைமுகமாக வைத்து அருண் பிரசாத்தை விஜய் சேதுபதி கலாய்த்து பேசுகிறார்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக இதுவரையில் 20 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
6 வாரத்தில் இருக்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கூறிய நிலையில், சுனிதா வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி இருக்கும் பொழுது கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் நாங்கள் கடந்து வந்த மோசமான பாதையை கதையாக கூறினார்கள்.
இந்த நிலையில் அருண் பிரசாத்திற்கான வாய்ப்பு வந்த போது, தான் ஒரு பெண்ணை கடந்த காலம் முதல் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார்.
அர்ச்சனாவை வைத்து கலாய்த்த விஜய் சேதுபதி
இதனை நேற்றைய தினம் விஜய் சேதுபதி எடுத்து பேசியிருந்தார்.
அருண் பிரசாத்தை பார்த்து, “அருண் பிரசாத் சட்டை மிக வித்தியாசமாக இருக்கிறது. உங்க டிசைனர் ரொம்ப நல்ல பன்றாங்க..” என பேசினார். அந்த சந்தர்ப்பத்தில் விஜய் சேதுபதி அவர் சட்டை முழுக்க பட்டன்கள் பதிக்கப்பட்டு இருந்தது குறித்து பேசவில்லை. அவர் மறைமுகமாக அர்ச்சனா குறித்து பேசியிருக்கிறார்.
அதற்கு அருண் பிரசாத், “ என் friend தான் சார் அதை பண்றாங்க..” என அருண் பிரசாத் காதலி அர்ச்சனாவை அங்கு குறிப்பிடுகிறார்.
அதை கேட்டு மற்ற போட்டியாளர்களை அவரை கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர். அதனால் அருண் பிரசாத்திற்கு வெட்கம் வர ஆரம்பித்து விட்டது. அப்போது விஜய் சேதுபதி, “அதான் எல்லோர் முன்பும் சொல்லிவிட்டீர்களே, அப்புறம் என்ன ரகசியம்..” என விஜய் சேதுபதியும் கலாய்த்து விடுகிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் சில சமயங்கள் அருணை வீட்டிற்கு பார்ப்பதற்கு அர்ச்சனா வீட்டிற்குள் வரலாம் என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |