கோடிக்கணக்கில் சம்பாதித்து எப்போதும் எளிமையாக இருக்கும் விஜய் சேதுபதியின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?
தன் இயல்பான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு விபரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர்தான் நடிகர் விஜய் சேதுபதி.
சினிமாவில் எவ்வித பின்புலமும் இல்லாமல் தன் திறமையாலும் நன் வித்தியாசமான நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தையும் மக்கள் மனதில் ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் கதாநாயகனாக பீட்சா படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. வெறும் கதாநாயகனாக நடித்து வந்த விஜய்சேதுபதி பேட்ட, விக்ரம், மாஸ்டர், ஜவான் திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார்.
சொத்துமதிப்பு
இந்நிலையில் விஜய் சேதுபதியின் சொத்து விபரம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. அதாவது நடிகர் விஜய் சேதுபதி இறுதியாக நடித்து முடித்த திரைப்படமான ஜவான் திரைப்படத்திற்கு 21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியிடம் வட சென்னை, கீழ்ப்பாக்கம் மற்றும் எண்ணூரில் மூன்று ஆடம்பர வீடுகள் உள்ளன. அவருக்கு தமிழ்நாடு முழுவதும் மதிப்புமிக்க சொத்துக்கள் உள்ளன.
இதுதவிர, விஜய் சேதுபதியிடம் பல விலையுயர்ந்த சொகுசு கார்களும் இருக்கிறது. அதன்படி பார்த்தால் இவரின் மொத்த சொத்து மதிப்பானது கிட்டத்தட்ட 140 கோடி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |