சாய் பாபா சன்னதியில் மண்டியிட்டு வணங்கிய விஜய்... படுவைரலாகும் காணொளி!
எதிர்வரும் மே 4 ஆம் திகதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், சீரடி சாய் பாபா சன்னதியில் மண்டியிட்டு தவெக தலைவர் விஜய் வணங்கிய காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ஆம் திகதி நடந்து முடிந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விஜய் சென்றிருந்தார்.

சீரடியில் விஜய்
அதை தொடர்ந்து நேற்றைய தினம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.அங்கு விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள்.

ஜோசப் விஜய் என்ற அடையாளத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் விஜய் தற்போது அரசியல் களத்திற்கு வந்த பிறகு அனைத்து மதத்தினரையும் கவரும் விதமாக புதிய ஆன்மிக அரசியலை கையில் எடுத்துள்ளாரா? என்ற கேள்வியை தற்போது அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், சீரடி சாய் பாபா கோயிலில் நீல நிற சட்டை அணிந்துக் கொண்டு விஜய் சாமி தரிசனம் செய்த காணொளி வைரலாகி வருகிறது.
சென்னையில் சாய் பாபாவுக்கு மிகப்பெரிய கோயிலை விஜய்யின் அம்மா கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy VIJAY seeks blessings at the Sai Baba temple in Shirdi 🙏🏼🙏🏼 pic.twitter.com/TIecAi51qW
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 29, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |