விஜய்- சங்கீதா விவாகரத்து? விளக்கம் கொடுத்த விஜய்யின் உயிர் நண்பர்
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா பிரிந்துவிட்டதாக ஒரு வருடத்திற்கும் மேலாக வதந்திகள் பரவி வருகின்றன, மேலும் அவர் நடிகரை விட்டு பிரிந்து லண்டனில் வசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தன.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய், ஜனநாயகன் படத்துடன் சினிமாவிலிருந்து விலகுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
முழுநேரம் அரசியலில் ஈடுப்பட போவதன் காரணமான சில மாதங்களுக்கு முன்னரே விஜய் அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ததாக வதந்தி காட்டுத் தீ போல் பரவியது.
இதற்கிடையில், கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும், லியோவில் த்ரிஷாவுடன் நெருக்கம், டேட்டிங் என்றெல்லாம் பல சர்ச்சை கருத்துக்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து விஜய் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை.
அதனை தொடர்ந்து விஜய் அவருடைய மனைவியுடன் இல்லை என்றும், மனைவி மற்றும் குழந்தைகள் லண்டனில் இருப்பதாகவும், இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி சர்சையை கிளப்பியது.
இதற்கு பலரும் கூறும் காரணம், விஜய்யின் மனைவி சங்கீதா, மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்குதான் கடைசியாக வந்தார்.
அதேபோல் விஜய் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அவருடைய பெற்றோர் மட்டுமே கலந்துகொண்டனர். இதனால் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா பிரிந்து விட்டனர் என கூறுகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், விஜய் குறித்த விதந்திகளுக்கு தற்போது பதில் கொடுத்திருக்கின்றார்.
நடிகர் சஞ்சீவ் பதில்
நடிகர் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ப்ரீத்தி, ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் சமையல் நிகழ்ச்சியில் ஒன்றில் ஜோடியாக கலந்துகொண்டனர்.
அப்போது நடிகர் சஞ்சீவிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பதில் அளித்த சஞ்சீவ், நானும் என்னுடைய நண்பர்களும் அடிக்கடி விஜய் வீட்டிற்கு செல்வோம்.
அங்கு விஜய்யின் மனைவி சங்கீதா எங்களுக்கு சமையல் செய்து கொடுப்பார். அவரது சமையல் நன்றாக இருக்கும். நாங்கள் எல்லோரும் சிரித்துக்கொண்டு பேசியபடியே சாப்பிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விஜய் மற்றும் அவரது மனைவி பிரியவில்லை. அவர்கள் ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள். விஜய் அவரது குடும்பத்தை வெளி உலகத்திற்கு காட்டிக்கொள்ள விரும்பவில்லை என சஞ்சீவ் பேசிய காாணொளியை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து விஜய் பற்றிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |