விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
ஜூன் 15 அன்று நீதிபதி சுஜாதா முன்னிலையில் நடைபெற்ற விஜய் விவகாரத்து வழக்கில் தற்போது புதிய திருப்பம் வந்துள்ளது.

விஜய் சங்கீதா விவாகரத்து
விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மார்ச் 24 அன்று தாக்கல் செய்யப்பட்ட மனு பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் 15 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி சுஜாதா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், இருதரப்பு வழக்கறிஞர்களும் நேரில் ஆஜராகினர். வழக்கை வீடியோ காட்சி வழியாக நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று இரு தரப்பும் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த கோரிக்கையை நீதிமன்றம் மறுத்தது.
இந்த நிலையில் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிபதி சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

நிதிமன்ற உத்தரவு
- நீதிமன்ற உத்தரவின்படி பின்வருமாறு அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டது.
- இருதரப்பினரின் மின்னஞ்சல் முகவரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,
- வழக்கறிஞர்களின் அதிகாரப்பத்திர ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்,
- விவாகரத்து வழக்கு என்பதால் முதலில் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,
- இருவரும் சமரச மையத்திற்கு அனுப்பப்பட்ட பின்னரே வழக்கின் அடுத்தகட்ட நடைமுறைகள் தொடங்கப்படும்,
- அதன் பின்னர் மட்டுமே காணொலி காட்சி வழியாக விசாரணை நடத்தலாமா அல்லது நேரில் நடத்தலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

என கூறப்பட்டுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு அதிக பணிச்சுமை இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எனவே இதற்கு கால அவகாசம் கேட்டு கோரிக்கை விடுக்கப்படட்டது. இதை பரிசீலித்த நீதிபதி சுஜாதா, இருதரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகு வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 07 அன்று நடத்த உத்தரவிட்டார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |