விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு... நீதிபதியின் அதிரடி உத்தரவு
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜய் சங்கீதா விவாகரத்து
தமிழ் திரையுலக முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்க்கு எதிராக அவருடைய மனைவி சங்கீதா நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல கோர்டில் தாக்கல் செய்துள்ளார்.
சுமார் 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் சங்கீதா இந்த முடிவை எடுத்துள்ளார். நடிகர் விஜய் சஙீதாவை 1998 ஜூலை 10ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னை எக்மோர் ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இன்று சங்கீதா மற்றும் விஜய் விவாகரத்து நீதிபதி சசிக்கலா விசாரித்துள்ளார். இதன் பின்னர் விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதம் 15-ந்தேதிக்கு நீதிபதி சசிகலா ஒத்திவைத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

சங்கீதா தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 26 அன்று முதன்முறையாக விசாரணைக்கு வந்த இவ்வழக்கு பின்னர் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு அதாவது தேர்தலுக்குச் சரியாக 3 நாட்களுக்கு முன்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதி சசிகலா விசாரணையில் வழக்கு சென்றதை அடுத்து ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.