Goat படத்தில் விஜய்யின் தங்கை; வைரலாகும் புகைப்படம்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படமான Goat படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்கும் பிரபலத்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Goat
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் Goat இல் பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
ஒரு நல்ல எதிர்பார்ப்பில் உருவாகி வரும் விஜயின் இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் விஜயின் தங்கையாக நடிக்கும் பிரபலத்தின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் தங்கை
இப்படத்தில் இளம் வயது விஜய்யின் தங்கையாக பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா மணிகண்டன் என்பவர் நடிக்கிறார்.
மேலும் இது அபியுக்தா மணிகண்டனின் முதல் படமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |