லியோ படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
விஜய் நடிப்பில் இன்று லியோ திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் அவர் இத்திரைப்படத்திற்காக வாங்கிய சம்பள விபரம் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படம்
கடந்த வருடம் கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி மாஸ் காட்டியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதே போல இந்த ஆண்டு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி இன்று வெளியிட்டிருக்கிறார்.
இவர்களின் இந்தக் கூட்டணி மாஸ்டர் திரைப்படத்தில் ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இன்று வெளியான லியோ திரைப்படத்தை ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மடோனா செபாஸ்டியன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, மேத்யூ தாமஸ், அனுராக் காஷ்யப், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இத்திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.
விஜய்யின் சம்பளம்
இந்நிலையில், விஜய் இத்திரைப்படத்திற்காக வாங்கிய சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் உருவாகியுள்ளது.
அதில் படம் வெளியாவதற்கு முன்பே 150 கோடிக்கு மேல் லாபத்தை பெற்றுள்ளது. அதில் இத்திரைப்படத்திற்காக விஜய் 120 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |