முதல்வர் விஜய் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா?

Vijay Tamil Cinema Tamil nadu
By Vinoja Jul 14, 2026 06:01 AM GMT
Report

முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் முதல் முதலில் வாங்கிய சம்பளம் குறித்த அவரின் தந்தை பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், அதிக வசூல் ஈட்டும் நட்சத்திரமாகவும் திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் விஜய். பல கோடி ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ள அவர், இறுதியாக நடித்த ஜனநாயன் படத்துக்கு 220 கோடி சம்பளம் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

முதல்வர் விஜய் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா? | Vijay S First Salary Was Rs 500 For Vetri In 1984

என்றும் இளமையாக வாழ கோடிகள் செலவிட்ட தொழிலதிபர்... இறுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி!

என்றும் இளமையாக வாழ கோடிகள் செலவிட்ட தொழிலதிபர்... இறுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி!

முதல் சம்பளம் 

ஆனால், தனது திரையுலகப் பயணத்தின் தொடக்கத்தில் அவர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தகவலாக உள்ளது.

நடிகர் விஜய், பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. சிறுவயதிலேயே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கியதன் மூலம் இன்று தமிழ் சினிமாவின் அழிக்க்க அடையாளமாக மாறியிருக்கின்றார்.

முதல்வர் விஜய் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா? | Vijay S First Salary Was Rs 500 For Vetri In 1984

ஆனால்  விஜய், தனது முதல் திரைப்படத்திற்காக பெற்ற சம்பளம் வெறும் ரூ.500 மட்டுமே என்பதே பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. 1984-ஆம் ஆண்டு வெளியான 'வெற்றி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக விஜய் திரையுலகில் அறிமுகமானார்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பி.எஸ். வீரப்பா தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு ரூ.500 சம்பளமாக வழங்கப்பட்டதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது பழைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

முதல்வர் விஜய் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா? | Vijay S First Salary Was Rs 500 For Vetri In 1984

அதன்பிறகு 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், 1992-ஆம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

மேலும், விஜய்யின் திரைப்பயணம் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களுக்கும் சாட்சியாக அமைந்துள்ளது. 1980-களில் பயன்படுத்தப்பட்ட ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் முதல், பின்னர் கலர் ஃபிலிம் காலம், தற்போது டிஜிட்டல் மற்றும் அதிநவீன திரைப்படத் தொழில்நுட்பங்கள் வரை பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜய் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா? | Vijay S First Salary Was Rs 500 For Vetri In 1984

இனியும் பொறுக்க முடியாது.... தலையில் ஏறி மிதித்து விடுவார்கள்! மகளுக்காக கொந்தளித்த குஷ்பு

இனியும் பொறுக்க முடியாது.... தலையில் ஏறி மிதித்து விடுவார்கள்! மகளுக்காக கொந்தளித்த குஷ்பு

வெறும் ரூ.500 சம்பளத்தில் தொடங்கிய விஜய்யின் திரைப்பயணம், இன்று இந்திய சினிமாவின் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளது.

தற்போது சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி தமிழக முதல்வராக தனது பணியை சிறப்பாக செய்து வருகின்றார். விஜயின் இறுதி படமான ஜனநாயகன் விரைவில் திரைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US