ஏன் விஜய் எங்களை கண்டுக்காமல் போனார்ன்னு தெரியுமா ? தாய் ஷோபனா ஓபன் டாக்
ஏன் விஜய் எங்களை கண்டுக்காமல் போனார்ன்னு என்று உண்மையை கூறி, சர்ச்சைக்கு விஜய் தாய் ஷோபனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தாயை பார்த்து யாரோ மாதிரி சென்ற விஜய்
சமீபத்தில் நடைபெற்ற ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய் வருகை தந்தார். அப்போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் நடிகர் விஜய்க்கு கை கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
அந்த நேரத்தில் தாய் ஷோபனாவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜய்யை பார்த்ததும் எழுந்து நின்றனர். அப்போது, விஜய் மற்றவர்களுக்கு கை கொடுத்து வந்தபோது, தாய்க்கும், தந்தைக்கும் கை கொடுத்துவிட்டு யாரோ மாதிரி செல்ல, தாய் ஷோபானா விஜய்யை ஏக்கத்தோடு பார்க்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. விஜய்யின் இந்த செயலுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து கமெண்ட் செய்தனர்.
முற்றுப்புள்ளி வைத்த தாய் ஷோபனா
இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நாங்கள் இருவரும் ஒரு விருந்தினராகத்தான் வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றோம்.
அந்த விழா ரசிகர்களை திருப்திப்படுத்தும் விழா. இது மட்டுமே விஜய்யின் நோக்கம். அங்கு எங்களை விஜய் கவனிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. பல பத்திரிக்கைகளில் இது குறித்து சர்ச்சையாக எழுதுகிறார்கள். ஆனால் விஜய்யும் நாங்களும் தினமும் சந்தித்து பேசிக்கொண்டுத்தான் இருக்கிறோம்.
பின்பு ஏன் ரசிகர்களுக்கான விழாவில் எங்களை தனியாக கவனிக்கவேண்டும்? நாங்கள் அது போல் எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை என்றார்.