ஒருவழியாக நுழைவு வரியைக் கட்டிய விஜய்: லீக்காகிய ரகசியம்! எவ்வளவுனு தெரியுமா?
நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியான ரூ.40 லட்சத்தினைக் கட்டியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் விஜய் பிரிட்டனிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் இறக்குமதி செய்து இருந்தார்.
இந்த காரை ஓட்டுவதற்கு முன்பாக கார் வாகன பதிவுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்ற போது, நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்பு வணிகவரித்துரை அதிகாரிகளிடம் குறித்த சான்றிதழைக் கேட்ட போது, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்தினால் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறியதால், இதனை எதிர்த்து நடிகர் விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, விஜய்யை சரமாரியாக பேசியதோடு, நுழைவு வரியுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் இந்த தீர்ப்பினை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார்.
இந்த நிலையில் அவர் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு 40 லட்சம் ரூபாய் வரைக்கும் நுழைவு வரியினை செலுத்தி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளன.
அனைத்து இறக்குமதி கார்களுக்கும் இவ்வாறான வரியை கட்டாளம் செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி சட்டத்திற்கு முன்பாக மதிப்பு கூட்டு வரி அமலில் இருந்தது. அப்போது இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. அப்படித்தான் நடிகர் விஜய் தன் காருக்கு மொத்தம் 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி இருக்கிறார்.
முதலில் 8 லட்சம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில் தற்போது 32 லட்சம் ரூபாய் செலுத்தி இருக்கிறார் என்று வணிகவரித் துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.