சூப்பர் ஸ்டாருக்கான தகுதி இவருக்கு இருக்கா? - விஜய்யை வெச்சு விளாசிய பிரபல நடிகர்!
சூப்பர் ஸ்டாருக்கான தகுதி இவருக்கு இருக்கா? என்று விஜய்யை பிரபல காமெடி நடிகர் விளாசியுள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து தற்போது விஜய் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பல முன்னனி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
விஜய்யை வெச்சு விளாசிய பிரபல நடிகர்
சமீபத்தில் நடைபெற்ற “வாரிசு” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையாக மாறியது.
இதைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் பலர் கொந்தளித்தனர். அந்த விழாவில் விஜய்யும் அதனை மறுத்து பேசவில்லை என்பதால் இணையத்தில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சரத்குமாரிடம் கேட்டபோது, “விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியதால் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை என ஆகிவிடாது” என்று கூறினார்.
இந்நிலையில் சமீபத்தில் காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “என்னை பொருத்தவரை ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான். விஜய் சார் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
விஜய் நடித்த விஷ்ணு படத்தின் பூஜைக்கு ரஜினிகாந்த் வந்தார். அப்போது, விஜய் ஓடிச் சென்று ரஜினி சாரை அழைத்துக்கொண்டு வந்தார். ரஜினி முன்பு கையைக்கட்டிக்கொண்டு நின்றார் விஜய்.
இதை நான் கண்கூடாக பார்த்தேன்.
அதேபோல், ‘வில்லு’ படத்திற்காக நடைபெற்ற விழாவில் விஜய்க்கு நிறைய பேர் வணக்கம் சொன்னார்கள். ஆனால் விஜய் எந்த பதில் வணக்கமும் வைக்கவில்லை. என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றார் அது எப்போதும் ரஜினிகாந்த்தான் என்றார்.