திருமண திகதியை அறிவித்த அமீர்- பாவனி ஜோடி: எப்போது தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது காதல் மலர்ந்து தற்போது ஒன்றாக வசித்து வரும் அமீர்- பாவனி ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, நட்பு, சண்டை என ஒருபக்கம் இருந்தாலும் காதலும் மலரத்தான் செய்கிறது.
அந்தவகையில் சீசன் 5ல் கலந்து கொண்ட அமீருக்குள், பாவனி ரெட்டி மீது காதல், பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது தன் காதலை பலமுறை அமீர் எடுத்துக்கூறியும் பாவனி ஏற்றுக்கொள்ளவில்லை.
நிகழ்ச்சி முடிந்து இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்குபற்றினர், அப்போதும் தன் காதலை பலமுறை வெளிப்படுத்தினார் அமீர்.
இறுதியாக நிகழ்ச்சி முடியும் தருவாயில் காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி, இருவீட்டாரின் சம்மதமும் கிடைக்கப்பெற்றது.
இருவரும் தங்களது வேலைகளில் கவனத்தை செலுத்தத் தொடங்கினர், ஒன்றாக ஒரே வீட்டிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது திருமணம் எப்போது என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அமீர்- பாவனி ஜோடி, பாவனிக்கு முன்னாள் கணவர் மீது இன்னும் காதல் இருக்கிறது.
எதையும் கடந்து போகக்கூடியவர் தான், ஆனால் அதன் வலி அவருக்குள் இருந்து கொண்டே இருக்கும்.
பயப்படுகிறார், ஆனால் எனக்கு தெரியும் அதுபோல் எதுவும் நடக்காது என்று, எங்கள் காதலை கூட பொய் என்றார்கள், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் எல்லாம் பொய் தான் என்றார்கள்.
திருமணம் செய்ய மாட்டார்கள் என்றார்கள், திருமணம் முடிந்தால் அடுத்து விவாகரத்து எப்போது என்பார்கள்.
பேசும் நபர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும், எங்களுக்கு தெரியும் எது உண்மை என்பது.
நவம்பர் 9ம் திகதி எங்களது திருமணம் நடைபெறவுள்ளது, பாவனியின் பிறந்தநாள் அன்றே எங்களது திருமணம் என தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |