ஏ ஆர் ரகுமானின் மகனுடன் வீடியோ காலில் பேசிய விஜயின் மகன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் அம்மா காலமானதை நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் மகனுக்கு விஜய் மகன் சஞ்ஜய் வீடியோகாலில் பேசி ஆறுதல் கூறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரஹ்மான்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருடைய தாயார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்தார்.
இதனால், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆறுதல் கூறியும் அவருடைய தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும் வந்தனர்.
இந்நிலையில், விஜயின் மகன் சஞ்சய் தன்னுடைய நண்பரான ஏ ஆர் அமீனுக்கு வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.