விஜய் பற்றி நிருபர் கேட்ட கேள்வியால் கடுப்பான மன்சூர் அலிகான்- வெளியான தகவல்
நிகழ்ச்சியில் விஜய் பற்றி நிருபர் கேட்ட கேள்வியால் மன்சூர் அலிகான் கடுப்பான தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து தற்போது விஜய் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பல முன்னனி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
கடுப்பான மன்சூர் அலிகான்
இந்நிலையில், பிக்பாஸ் புகழ் அமீர் – பாவ்னி இணைந்து நடிக்கும் புதிய படமான ‘சரக்கு’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய மன்சூரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அப்போது, ‘விஜய்யின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?’ என்று ஒரு நிருபர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மன்சூர். ‘நாட்டுல பெரிய புரட்சிகள் எல்லாம் வர இருக்கு. தமிழ் நாட்டோடு தலைவிதியை யாரும் மாத்திரதா இல்ல, அரசியல் ரீதியாக மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.
அதுதான் முக்கியமே தவிர, வேலை வாய்ப்பு இல்லாமல், வேலை செய்ய கூப்பிட்டாலும் வருவதற்கு தமிழ் மக்கள் எங்கே இருக்காங்கனு கூட தெரியல’ என்றார்.
அதாவது தமிழ் நாட்டை எப்படி உயர்த்தனும் என்பதை யோசிக்கிறதை விட்டு விட்டு விஜய்யின் வளர்ச்சியை பற்றி கேட்காதீங்க என்று மறைமுகமாக மன்சூர் அலிகான் கூறினார்.