கடனை கொடுத்தப்பின்னும் என்னை கடனாளி சொல்றீங்க.. விஜய் மல்லையா போட்ட ட்வீட்!
கடனை எல்லாம் திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரர் என்கிறது வங்கிகள்' என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
இந்திய வங்கிகளில் கடனை வாங்கி பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துகளை முடக்க பிரிட்டன் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துகளை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் (Kingfisher Airlines) நிறுவனத்திடம் இருந்து ஐடிபிஐ (IDBI) வங்கிக்கு வரவேண்டிய நிலுவைக் கடன் மொத்தமும் மீட்கப்பட்டதாக அவ்வங்கி அறிவித்துள்ளது.
மேலும், இதுதொடர்பான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஜய் மல்லைய்யா, "கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரர் என்று வங்கிகள் சொல்கிறது" என்று ட்விட் செய்திருக்கிறார்.
And the Banks say I owe them money ! pic.twitter.com/XnWSjXnnF9
— Vijay Mallya (@TheVijayMallya) July 29, 2021
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        