வீட்டை சுற்றி தேங்கி நிற்கும் வெள்ளம்: ஓடி வந்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்
வெள்ளத்தில் பசியால் தவித்த மக்களுக்கு நடிகர் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் உதவியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் விஜய், இவர் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகியது.
இதன்பின்னர் தளபதி 68 ற்கான படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
இப்படியொரு நிலையில் விஜயின் மகன் சஞ்சய் சினிமாவிற்குள் என்றிக் கொடுக்கிறார். ஆனால் விஜய் இன்னும் 3 ஆண்டுகளுக்கு சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் இயக்கம் உதவி
இந்நிலையில், இந்தியாவில் மிக்ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், போரூர், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் போன்ற பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி உள்ளன.
வெள்ளம் தேங்கி நிற்பதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல், வீட்டிற்குள்ளேயே பசியுடன் முடங்கி இருக்கிறார்கள்.
இந்த இக்கட்டான நிலையில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் தளபதியின் ரசிகர்கள் படகில் வீடு தேடி சென்று உதவி செய்து வருகின்றனர்.
இந்த செய்தி புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இது போன்று செய்து வருவது அரசியலுக்காக என்றும் ஒரு சிலர் பேசி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |