முகத்தை மறைத்துக் கொண்டு முக்கிய நபரை சந்தித்த ஜோவிகா... யார் அந்த நபர்னு தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோவிகா முகத்தை மறைத்துக்கொண்டு பிரபல நடிகர் ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.
ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களில் இரண்டு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை வனிதாவின் மகளான ஜோவிகா குறைவான வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார்.
முக்கிய நபரை சந்தித்த ஜோவிகா
ஜோவிகா நேற்று தனது தாயை முதன்முதலாக சந்தித்த காட்சி வைரலாகி நிலையில், தற்போது அவர் விமானநிலையத்தில் நடிகர் பார்த்திபனை சந்தித்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
ஆம் தனது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த ஜோவிகா பார்த்திபனை சந்தித்ததுடன், அவரது காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கியுள்ளார். நடிகர் பார்த்திபனுக்கு உதவியாளராக தான் ஜோவிகா பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |