20 ஆண்டுகளுக்கு பின்பு விஜய்யுடன் நடிக்கும் பிரபல நடிகை... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் லியோ
நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடிகை கிரண் 20 ஆண்டுக்கு பின்பு விஜய்யுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் லியோ
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தற்போது லியோ படத்தில் படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் நடித்த படங்கள் சற்று பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தினை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும். ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்து, லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ள நிலையில் இப்படம், அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது.
கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த த்ரிஷா 15 ஆண்டுகளுக்கு பின்பு விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.
அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை கிரண் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்டி ஒன்றின் மூலம் இவர் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இவர் 2003ம் நடிப்பில் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |