ஜேசன் சஞ்சயிற்கு நோ சொன்ன இரண்டு நடிகர்கள்! கடைசியாக விஜயிற்காக ஒப்புக் கொண்ட பிரபலம்
ஜேசன் சஞ்சயின் படத்திற்கு முக்கியமான இரண்டு பிரபலங்கள் நோ சொல்லி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவரின் அன்பு மகன் தான் ஜேசன் சஞ்சய். இவர் வெளிநாட்டில் திரையாக்கம் தொடர்பான படிப்பை படித்து விட்டு தற்போது கோலிவுட்டில் நுழையவுள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவிலிருந்து இடைவிலகும் பொழுது மகன் சஞ்சயின் வருகை ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
அத்துடன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகராக நடிக்கவுள்ளாராம்.
புதிய ஹீரோ
இந்த நிலையில் விஜய் சேதுபதியை நீக்கி விட்டு அந்த இடத்தை பிக்பாஸ் நாயகன் அரிஷ் கல்யாண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் அவர்களை பின் தள்ளி விட்டு தற்போது சஞ்சயின் படத்திற்கு கவின் நடிக்கவுள்ளாராம். இதுவும் நடிகர் விஜயிற்காக ஒப்புக் கொண்டுள்ளாராம்.
இந்த செய்தி கேட்டு விஜய் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.
மேலும் தமிழ் சினிமாவில் விஜயிற்கு இவ்வளவு மவுசு இருக்கும் பொழுது சஞ்சயின் படத்திற்கு ஏன் இப்படி தட்டுபாடு இருக்கின்றது” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |