கடைசி படத்திற்கு இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் விஜய்: எத்தனை கோடி தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபடுவதாக கூறியிருந்தார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து ஒரேயொரு படத்துடன் சினிமாவை விட்டு விலகுகிறார்.
இதன் காரணமாக அவரது கடைசி படம் குறித்த தகவலை அறியும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளது.
விஜய்யின் கடைசிப் படத்தை இயக்கப் போகிறவர் என வெற்றிமாறன், ஹெச்.வினோத் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
மேலும், RRR படத்தைத் தயாரித்த டிவிவி என்டர்டெயின்மெண்ட், டிடிவி தனய்யா இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விஜய் தற்போது GST உடன் சேர்த்து 150 கோடிகள் சம்பளம் பெற்று வருகிறார். G.O.A.T. படத்தில் இது 200 கோடிகளாக உயர்ந்திருக்கிறது.
அவரது கடைசிப் படத்துக்கு 250 கோடிகள் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமை விஜய்க்குக் கிடைக்கும்.
நடிகர் மட்டுமின்றி இயக்குநர் உள்பட எந்த இந்திய திரையுலக பிரபலமும் 250 கோடிகளை சம்பளமாக பெறவில்லை என்ற நிலையில் விஜய் பெற்றால் இது ஒரு சாதனை ஆகும்.