200 கோடிக்கு சம்பளம் வாங்கும் விஜய் வெறும் 500 ரூபாய் சம்பளம் வாங்கியது தெரியுமா?
தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் ஒரு காலத்தில் வெறும் 500 ரூபாய் மட்டும் தான் ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்கியிருக்கிறார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். விஜய்- சங்கீதா தம்பதிகளுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க இருக்கிறார்.
குறைவான சம்பளம்
சினிமாவில் மக்கள் தளபதியாக இருக்கும் விஜய் ஆரம்பத்தில் ஒரு படத்திற்கு 500 சம்பளம் பெற்ற விடயம் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், 1984ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த படம் தான் வெற்றி திரைப்படம். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய்.
அந்தத் திரைப்படத்தை விஜய்க்கு சம்பளமாக வெறும் 500 ரூபாய் சம்பளம் பெற்றிருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்கியதும் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |