பிகில் படத்தை காட்டி சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு.. நடிகர் விஜய் கொடுக்கும் சர்ஃப்ரைஸ்!
இருசக்கர வாகனத்தில் விழுந்து அடிப்பட்ட சிறுவனுக்கு பிகில் படத்தை காட்டி தையல் போட்ட சம்பவம் வெளியாகியது.
சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்த சிறுவன் சசிவர்ஷன்(10). இவன் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கீழே விழுந்துள்ளார்.
இதனால் நெற்றியில் அவருக்கு பலமானக் காயம் பட்டது. அதனால் அவருக்கு தையல் போடவேண்டிய சூழல் உருவானது. ஆனால் சிறுவனோ வலியில் தையல் போட அனுமதிக்காமல் அடம் பிடித்துள்ளான்.
அப்போது அவனுக்குப் பிடித்த நடிகரான விஜய்யின் பிகில் படத்தை செல்போனில் போட்டுக்காட்டவும், அதைப் பார்க்க ஆரம்பித்துள்ளான். அதன் பின்னர் சிறுவனுக்கு மயக்க ஊசி செலுத்தி தையல் போட்டு முடித்துள்ளனர் மருத்துவர்கள்.
இது செய்தியாக வெளியாகி அந்த குட்டி தளபதி ரசிகன் விரைவில் குணமாக விஜய் ரசிகர்கள் கடவுளிடம் வேண்டினர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் அந்த சிறுவனுக்கு உடல்நிலை சரியானதும் நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக விஜய் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர் .