நடிகர் விஜய்யின் வீட்டு வாசலில் கண்ணீர் விட்டு அழுத மாணவி - வைரலாகும் வீடியோ!
நடிகர் விஜய்யின் வீட்டு வாசலில் கண்ணீர் விட்டு அழுத ரசிகையான மாணவியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து தற்போது விஜய் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பல முன்னனி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
கண்ணீர் விட்டு அழுத மாணவி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
நடிகர் விஜய்யின் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்து அவருடைய ரசிகையான மாணவி ஒருவர் கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார். ஒரே ஒரு முறை தளபதி விஜய் சாரை பார்க்க வேண்டும். என்னென்னு தெரியவில்லை எனக்கு அழுகை வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து வந்திருக்கிறேன். அவரை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று கண்ணீருடன் பேசுகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் கண்டிப்பாக விஜய் உங்களை சந்திப்பார். கவலைப்படாதீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.