கோவிலுக்கு போனதும் ஒரு குத்தமா? திரும்பவும் சர்ச்சையில் மாட்டினாரா விஜய்?
நேற்று விஜய் திருச்செந்தூரில் விஸ்வரூப தரிசனத்தில் கலந்துகொண்டார். இது குறித்து தற்போது புதிய சர்ச்சை உண்டாகி உள்ளது.

விஜய் திருச்செந்தூர் தரிசனம்
நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலுக்கான முடிவுகள் எதிர்வரும் நான்காம் திகதி வெளிவரும்.
இந்த நிலையில் நடிகர் விஜய் ஏப்ரல் 27-ந் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்து. அங்கிருந்து காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விஸ்பரூப தரிசனத்தில் ஈடுபட்டார்.
இதன்போது விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில், வேல் பரிசாக வழங்கப்பட்டது.
அந்த வேலோடு கோவில் அருகே உள்ள கடற்கரைக்கு சென்று விஜய் கால்களை கழுவி விட்டு வழிபட்டார். இந்த நிலையில் இதன் மூலம் விஜய் ஆகம விதிகளை மீறி உள்ளதாக புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.

புதிய சர்ச்சை என்ன?
விஜய் நேற்று விதிகளை மீறி திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல வலதுசாரி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
உண்மையில் விஜய் செய்தது விதிமீறலா என்பது தற்போது ஒரு கேளிவியாக மாறி உள்ளது.
இதன்படி கோவில் நுழைவு அங்கீகார சட்டம் 1947-ன் படி, இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

2024-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், ஆகம கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள், கோவிலின் வெளிப்புர பகுதிகளை பார்வையிடவும், கொடிமரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், தீர்ப்பு வழங்கி இருந்தது.
ஆனால் வேறு மதம் சார்ந்த ஒருவர் தெய்வத்தின் மீது நம்பிக்கை இருந்தால் மற்றும் இந்து மத வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தால், அவர்கள் கோவில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் விஜய் வேறு மதத்தினர் எனபதால் அவர் எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்த பின்னரே, அவருக்கு திருச்செந்தூர் கோவிலில் வரவேற்பு கொடுத்ததாக இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கமளிக்கப்படுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |