விஜய் கொடுத்த வைர நெக்லஸ்... மாணவி நந்தினி எடுத்த திடீர் முடிவு
திண்டுக்கல் மாணவி நந்தினி விஜய் கொடுத்த வைர நெக்லேஸை குறித்து பேசிய வார்த்தை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மாணவ மாணவிகளுக்கு விருது
நடிகர் விஜய் கடந்த 17ம் தேதி தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையும் வழங்கினார்.
காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்ச்சி இரவு 11 மணிவரை தொடர்ந்த நிலையில், நடிகர் விஜய்யும் சிரித்த முகத்துடன் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி பரிசுகளை வழங்கினார்.
இதில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதன்முறையாக 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சரித்திரத்தில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவிக்கு வைர நெட்லஸ் பரிசாக வழங்கினார்.
நந்தினி பேசியது என்ன?
இதுகுறித்து நந்தினி பேசுகையில், நடிகர் விஜய்யுடனான சந்திப்பு மிகவும் மகிழச்சியை ஏற்படுத்தியதாகவும், அவர் கையால் நெக்லஸ் வாங்கிய நிமிடத்தை தான் மறக்க மாட்டேன் என்றும்... நான் விஜய்யை சந்திக்க போறேன் என்று தெரியும் ஆனால் வைர நெக்லஸ் பரிசாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
தான் இதுவரை தங்கத்தில் கூட நெக்லஸ் போட்டதுமில்லை... அதற்கான வசதியும் எனக்கு கிடைத்ததில்லை... தற்போது விஜய் கையில் வாங்கியிருக்கும் இந்த நெக்லஸை நான் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என்றும் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் மெர்சல் படம் தனக்கு பிடித்துள்ளதாக நந்தினி தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |