ரஷ்மிகா,விஜய் தேவர்கொண்டா ரகசிய திருமணம் - அவ்வளவு கெஞ்சியும் மறுத்தது ஏன்?
விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மந்தனாவிற்கு வரும் 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளது.
விஜய் தேவர்கொண்டா ராஷ்மிகா திருமணம்
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஒன்றாக சேர்ந்து பல படங்கள் நடித்துள்ளனர். அவை அனைத்தும் சிறப்பான வெற்றிகளை தந்ததில் இருந்து இவர்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.
இவர்கள் இருவரின் கேமிஸ்ட்ரியை ரசிகர்கள் ரசிக்க தொடங்கினார்கள். இதன் பின்னர் இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என சமூக வலைத்தள பக்கத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் ரசிகர்கள் விஜய்தேவர்கொண்டாவும் ராஷ்மிகாவும் எப்போது திருமணம் செய்வார்கள் என எதிர்பார்த்துகொண்டு இருந்தனர்.
இந்த நேரத்தில் தான் ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த திருமணம் மிகவும் ரகசியமான முறையில் நெருங்கிய உறவுகளை மட்டும் வைத்து நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது ரஷ்மிகா விஜய் தேவர்கொண்டா திருமணத்தை ஆவணப்படமாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கேட்டுள்ளது என கூறப்படுகின்றது.
இந்த ஆவணப்படத்திற்கு ரூ.60 கோடி வழங்க நெட்ஃப்ளிக்ஸ் தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளது. இந்திய சினிமா திருமண ஆவணப்படங்களில் இந்த ஆவணப்படம் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் எனப்பட்டது.

ஆனாலும் இந்த விடயத்தை விஜய்தேவரகொண்டா மறுத்துள்ளார். அவர் திருமண நிகழ்வுகள் விலைமதிப்பற்றவை அவற்றை தான் ரகசியமாக வைத்துக்கொள்ள போகிறேன் என கூறி இந்த ஆவணப்படத்தை மறுத்துள்ளார்.
ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் எவ்வளவு கொஞ்சியும் இந்த ஒப்பந்தத்தை விஜய் தேவர்கொண்டா மறுத்துள்ளார். இது சமூக லைத்தள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |