விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் உறுதி... வைரலாகும் திருமண பத்திரிகை!
பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் எதிர்வரும் 26 ஆம் திகதி திருமணம் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில், தற்போது இவர்களின் திருமண பத்திரிக்கை வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை ராஷ்மிகா
நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.
கடந்த வருடம் இவர்களுக்கு ரகசியமான நிச்சயதார்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா -விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு பிப்ரவரி 26ஆம் திகதி தான் திருமணம் என்ற தகவல் வைரலாகி வரும் நிலையில், இவர்களின் திருமண பத்திரிக்கை இணையத்தில் கசிந்துள்ளது.

அதன்படி, வரும் பிப்ரவரி 26 ஆம் திகதி விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் நடைபெற இருப்பதாக அந்த திருமண பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திருமண பத்திரிகையானது, திரையுலக பிரபலங்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |