இந்த திகதியில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்தம்... வெளியான தகவல்
நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் தொடர்ந்து பல நாள்களாக டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என இரண்டு படங்களிலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படங்களும் பெரிய வசூலை குவித்தன.
தெலுங்கு திரையுலகை தாண்டி இருவருக்கும் தமிழ், இந்தி உள்ளிட்ட திரையுலகிலும் பெரிய வரவேற்பு கிடைத்தது. ராஷ்மிகா நாடு முழுவதும் புகழ்பெற்ற நடிகையாக திகழ்கிறார். புஷ்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானார்.
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. குறிப்பாக, இருவரும் வெளிநாட்டில் தங்களின் விடுமுறை தினங்களை இணைந்து கொண்டாடுவதாகவும் அவ்வப்போது கிசுகிசுக்கப்படும்.
இருப்பினும், இதன்மீது இருவர் தரப்பிலும் எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை. அந்த வகையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வரும் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் தங்கள் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இது குறித்து ராஷ்மிகா மந்தனாவோ, விஜய் தேவரகொண்டாவோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்தம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |