கூட்டத்தில் சிக்கிய ராஷ்மிகா... விஜய் தேவகொண்டா எப்படி பாதுகாத்திருக்கார்னு பாருங்க
நடிகர் விஜய் தேவரகொண்டா தனது மனைவி ராஷ்மிகாவை பாதுகாப்பும் அழைத்துச் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நிகழ்வுகளின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.
தற்போதும் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மனைவியை பாதுகாத்த விஜய் தேவரகொண்டா
இவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு சமீபத்தில் ஹனிமூன் சென்றுள்ள நிலையில், அங்கியிருந்து வெளியிட்ட காணொளி, புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் Ranabaali ஷூட்டிங்கிற்காக அனந்தபூர் சென்று இருந்தனர். அங்கு இருக்கும் கோவில் ஒன்றில் அவர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கோவிலில் இருந்து வெளியே வருகையில், இருவரையும் ரசிகர் கூட்டம் சூழ்ந்துள்ளது. நெரிசலுக்கு மத்தியில் எந்தவித கோபமோ, பதட்டமோ இல்லாமல் சிரித்த முகத்துடன் தனது மனைவியை பாதுகாப்பாக விஜய் தேவரகொண்டா அழைத்துச் சென்றுள்ளார்.
இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன், விஜய்யின் செயலை ரசிகர்களை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |