வளர்த்து விட்ட கேப்டனை பார்க்க மலர்மாலையுடன் வந்த விஜய்.. கண்ணீர் மல்க வெளியான காட்சி
வளர்த்து விட்ட கேப்டனை பார்க்க மலர்மாலையுடன் வந்த விஜயின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் - விஜய்
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த்.
இவர் விஜயின் இந்த வளர்ச்சிக்கு விஜயகாந்தும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
சினிமாவிற்குள் விஜய் வந்த ஆரம்ப காலத்தில் தனக்கு வந்த வாய்ப்பை விஜயிற்கு கொடுத்ததாக சினிமா வட்டாரங்களில் ஒரு கதை இருக்கின்றது.
அந்த வகையில் ‘செந்தூரப்பாண்டி’ படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். அதன் பிறகு அவரது திரை வாழ்க்கை சக்சஸ் பெற்றது. இதனை அவரே வீடியோ பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார்.
அதேபோல விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முக்கிய திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேரில் சென்று அஞ்சலி
இந்த நிலையில் நடிகர் விஜய், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கியபடி நின்று சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்துகிறார்.
தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன் “கேப்டன் உடல்நிலை மோசமாக இருந்த போது வராத விஜய் இப்போது சரி வருகை தந்துள்ளாரே..” என ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |