கட்டிய மனைவியே ஒர்த் இல்லயா? நீங்க நாட்ட காப்பாத்த போறீங்களா..கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
தவெக மகளிர் தின விழாவில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்திய தலைவர் விஜய் இறுதியில் சங்கீதா உடனான விவாகரத்து வழக்கு பற்றி மறைமுகமாக கருத்து தெரிவிக்கையில், அவ்வளவு ஒர்த் இல்ல.. என்று கூறிய விடயம் இணையத்தில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் கொந்தளித்த நெட்டிசன்கள் கட்டிய மனைவியையையே மேடை போட்டு ஒர்த் இல்லன்னு சொன்ன முதல் ஆள் நீங்க தான்... மனைவியையே இப்படி பேசி நடுத்தெருவில் விட்டுவிட்டு போகும் நீங்கள் தான் நாட்டு மக்களை காப்பாற்ற போகின்றீர்களா? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சை
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், குறித்த நடிகை த்ரிஷா தான் என்ற சந்தேகம் இருந்தாலும், விஜய் ரசிகர்கள் இதுவரையில் விஜய்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

ஆனால், சர்ச்சைகளுக்கு மத்தியில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் விஜய் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷா உடன் பங்கேற்ற காணொளி இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்கள் உட்பட தமிழக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எந்தத் தளபதிக்காகச் சண்டை போட்டோமோ, அவரே இப்படிச் செய்துவிட்டாரே.. என விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மகளீர் தின விழாவில் விஜய் தெரிவித்துள்ள கருத்தால் மேலும் நெட்டிசகள் கொந்தளித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |