அம்மாவை சைக்கிளில் ஏற்றிச் சென்ற விஜய்... யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம்
நடிகர் விஜய் சிறுவயதில் தனது தாயை வைத்து சைக்கிளில் சென்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் நிலையில், இவர் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், விரைவில் அந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று மக்கள் எதிர் பார்த்துள்ளனர்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68ல் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜய்யின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது சிறுவயதில் அவரது தாய் சோபனாவை தனது சைக்கிளில் ஏற்றி வைத்துக் கொண்டிருக்கின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |