டுவிட்டரில் ட்ராண்டாகும் Joseph Vijay: பூதாகரமாக வெடித்த கார் பிரச்சினை! குமுறும் ரசிகர்கள்
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரிவிலக்கு கேட்டு நடிகர் விஜய் நீதிமன்றத்திற்கு அனுப்பிய மனுவிற்கு, கொடுக்கப்பட்டுள்ள பதிலால் பெரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.
நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கினை ரத்து செய்ததோடு, 1 லட்சம் ரூபாயை அபராதமும் நீதிமன்றம் விதித்ததோடு, அதனை முதல்வர் கொரோனா நிதிக்கு செலுத்தவும் கூறியுள்ளது.
கோடிக்கணக்கான பணத்தினை போட்டு கார் வாங்க தெரிந்த நடிகருக்கு அதற்கான வரி கட்டத் தெரியாதா? என்று பலரும் விளாசி வருகின்றனர்.
இந்நிலையில் Joseph Vijay என்கிற ஹேஷ்டேக் நேற்றிலிருந்து ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் #RealHeroJosephVijay என்கிற ஹேஷ்டேகை விஜய் ரசிகர்கள் தற்போது டிரெண்டாக்கவிட்டுள்ளனர்.
Real Hero Thalapathy Joseph Vijay ? #WeSupportThalapathyVijay @actorvijay #Master #Beastpic.twitter.com/sv23SZFzvJ
— ÃŘÜŃ VÏJŸ MŠĐ (@ArunPrakash2126) July 14, 2021
Joseph Vijay ஹேஷ்டேகை பார்த்த ரசிகர்கள், பிரச்சினை என்று வந்தால் மட்டும் விஜய் ஜோசப் விஜய்யாக மாறிவிட்டாரா? அவர் கிறிஸ்தவர் என்பது யாருக்குமே தெரியாதா? பிரச்சனை நேரங்களில் விஜய்யை மதத்தின் பெயரால் விமர்சிப்பதை ஏற்க மாட்டோம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இவ்வளவு பிரச்சினை நடந்து வந்தாலும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அதற்கான படப்பிடிப்பிற்கும் இந்த காரில் தான் சென்று வருகின்றார் என்று ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருகின்றனர்.
Joseph Vijay ? @actorvijay #Beast @BeastTamilMovie #Master pic.twitter.com/gimbKrsNdn
— Vijay Fans Updates (@VijayFansUpdate) July 14, 2021