விஜய்யைத் தொடர்ந்து கார் சர்ச்சையில் சிக்கிய தனுஷ்: நாளை விசாரணைக்கு வரும் வழக்கு
நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நாளை நீதிமன்றம் உத்தரவு பிறக்கப்பட உள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் சொகுசு காருக்கான நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுப்பிரமணியம் வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது தனுஷ் வழக்கிலும் அதே நீதிபதி தான் நாளை தீர்ப்பளிக்கவிருக்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து வாங்கிய காருக்கு நுழைவு வரி ரூ.60.66 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.
ரூ.30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால் விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய தனுஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.