அட என்னது நடிகர் விஜயின் சித்தி இந்த சீரியல் நடிகையா?.. ரசிகர்களிடையே வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகர் என்றால் அது நடிகர் விஜய் தான். அண்மையில் இவரின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி தற்போது வரை வசூல் ரீதியாக நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தம்பி விக்ராந்த். அதாவது விஜய்யின் சித்தி மகன் ஆவார்.
அவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலா. இவர் விஜய்யின் அம்மா ஷோபாவின் தங்கை ஆவார்.
ஷீலா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து அறிந்த ரசிகர்கள் தற்போது அதனை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.