விஜய் - த்ரிஷா வைரல் காணொளியை திசைதிருப்பிய நடிகை சிம்ரன்! நீங்களே பாருங்க
நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் இதுவரையில் விஜய்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
ஆனால் நேற்றைய தினம் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்திருந்தார்.

குறித்த விடயம் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்தியுள்ளதாக விஜய் ரசிகர்களில் ஒருசாரார் உட்பட நெட்டிசென்கள் கொந்தளித்து வருகின்றார்கள்.
திசை திருப்பிய சிம்ரன் காணொளி
இந்நிலையில் அதே திருமணத்துக்கு அதே நிறத்தில் சேலை அணிந்து நடிகை சிம்ரன் மாஸாக தனது காரில் வந்திரங்கிய காணொளி இணையத்தில் வெளியாகி, விஜய்- த்ரிஷா வைரல் காணொளியை ரசிகர்கள் மற்றம் மக்கள் பார்க்கும் கோணத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவருவதுடன் விஜய் மீது தப்பு கிடையாது இந்த திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு ஏஜிஎஸ் நிறுவனமே ஆடை வாங்கிக்கொடுத்திருப்பார்கள் போல் இருக்கின்றது என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |