அவ இன்னும் என்கூட தா இருக்கா! இறந்த மகள் குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி
பிரபல இசையடைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகளின் இறப்பு குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு விஜய் ஆண்டனியின் கொடுத்துள்ள பதில் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
விஜய் ஆண்டனி
தமிழ் திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி.
தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், எடிட்டர், ஆடியோ பொறியாளர், இயக்குனர் என சினிமாவில் பன்முகத் திறமைக் கொண்ட அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
விஜய் ஆண்டனி பாத்திமா என்றப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு மீரா மற்றும் லாரா என்ற இரு மகள்களும் இருந்தார்கள்.
கடந்த செப்டம்பர் 19, 2023 அன்று விஜய் ஆண்டனியின் மகள் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிக மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
இவரின் மறைவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனால் விஜய் ஆண்டனி மனதளவில் சுக்குநூறாக உடைந்துபோனார் என்றால் மிகையாகாது.
ஆனால் எதையும் வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் இவர் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமே தனித்துவமாக இருக்கும்.
விஜய் ஆண்டனி ஓபன் டாக்
இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் தயங்கியபடியே பேட்டி காண்பவர் விஜய் ஆண்டனிடம் அவரின் மகள் இழப்பில் இருந்து எப்படி வெளியில் வந்தீங்க.. அவரை மிஸ் பண்ணுறீங்களா? என கேட்போது, யாரும் எதிர்பாராக்காத வகையில் ஒரு பதிலை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், நன்றாக யோசித்து பார்த்தால் உங்களுக்கு புரியும். நான் அவளை மிஸ் பண்ணவில்லை... காரணம் மிஸ் பண்ணவே முடியாது, அவள் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறாள்.எப்போதும் என்னுடன் பேசிக்கொண்டே இருக்கின்றாள் என குறிப்பிடுட்டுள்ளார்.
குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் அவரின் உருக்கமான பதிலுக்கு லைக்குகளும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |