தேவாலயத்தில் இறுதி பிரார்த்தனை: விடைபெற்றார் மீரா விஜய் ஆண்டனி
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என சினிமாவில் பன்முகத்திறமையை கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் நேற்று தற்கொலை செய்து கொண்டு இன்று மொத்தமாக விடைப்பெற்றிருக்கிறார்.
விஜய் ஆண்டனி
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவர் ஒரு இசையமைப்பாளராகவதற்கு முன்பு தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், எடிட்டர், ஆடியோ பொறியாளர், இயக்குனர் என்று பல வேலைகள் செய்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி, சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மீரா மற்றும் லாரா என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள்.
மகள் தற்கொலை
இந்நிலையில், நேற்று அதிகாலை மீரா விஜய் ஆண்டனி சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3 மணிக்கு மன அழுத்தம் காரணமாக தனது துப்பாட்டாவை பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் உடலை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
விஜய் ஆண்டனி மகளுக்கு திரையுலகில் இருந்த பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில், அவரின் இறுதி அஞ்சலியானது நுங்கப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டு அவரின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |