முகம் மாறிய நிலையில் விஜய் ஆண்டனி! முதன்முதலாக வெளியான புகைப்படம்
நடிகர் விஜய் ஆண்டனி சிகிச்சைக்கு பின்பு தனது முகமே மாறியுள்ள நிலையில் முதன்முறையாக வெளியுலகிற்கு வந்துள்ளார்.
விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தினை சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இயக்கி இசையமைத்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது பயங்கர விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
விபத்தில் சிக்கியது எப்படி?
படப்பிடிப்பின் போது கேமராவின் அருகே சென்றால் தான் அவர்களால் சரியாக காட்சிப்படுத்த முடியும் என, அவர்களது படகிற்கு மிக அருகில் தனது சி பைக்கில் நாயகியுடன் சென்றுள்ளார்.
ஒருமுறை சரியாக சென்றுவிட்ட விஜய் ஆண்டனி இரண்டாவது முறை சாகசம் செய்ய நினைத்து வேகமாக வந்துள்ளார். எதிர்பாராத நிதமாக கமெரா மேன்கள் இருந்த படகில் மோதியுள்ளார்.
படகில் மோதியதில் மூக்கு, தாடை பகுதிகள் உடைந்து மயங்கி நடுக்கடலில் நீருக்குள் மூழ்கிவிட்டேன். அங்கிருந்தவர்கள் காப்பாற்றி முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது சிகிச்சை முடிந்து பிச்சைக்காரன் 2 பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது விஜய் ஆண்டனி தனக்கு நேர்ந்த விபத்து குறித்து கூறியுள்ளார். விபத்திற்கு பின்பு விஜய் ஆண்டனியின் முகம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி பேசுகையில், இப்போது நலமாக இருக்கிறேன், எந்த குறையும் இல்லை. விபத்து நடப்பதற்கு முன்பு இருந்ததை விட இப்போது பல மடங்கு புத்துணர்ச்சியுடனும், ஸ்ட்ராங்காகவும் மாறியுள்ளதாக கூறியுள்ளார்.