#வரிகட்டுங்க_விஜய், #கடனைஅடைங்க_அஜித்! டுவிட்டரில் மோதும் ரசிகர்கள்
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.
இதற்கு வரி விதிக்க தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கடுமையாக எச்சரித்ததுடன், 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதனிடையே ட்விட்டரில் வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.
இதற்குப் போட்டியாக கடனைஅடைங்க_அஜித் என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகின்றது.
மேலும் விஜய் ரசிகர்கள் WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Trend this two tags?? innakki fun pandrom
— Master siva? (@Mastersiva2003) July 13, 2021
#கடனைஅடைங்க_அஜித்#WeSupportThalapathyVijay pic.twitter.com/oZY0opCbTo