மூன்றாவது முறை தாலி கட்டும் விக்னேஷ் சிவன்: எதற்காகத் தெரியுமா?
இயக்குனர் விக்னேஷ்சிவன் மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மூன்றாவது முறையாக தாலி கட்டவேண்டும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமணம்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் உச்ச நடிகையாக மாறிவிட்டார்.
2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் திகதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.
இவர்களின் திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார்கள்.
மூன்றாவது திருமணம்
இந்நிலையில் இவர்கள் திருமணம் நடந்த நேரம் சரியில்லை என்று ஜோசியர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், இவர்களுக்கு ஏற்கனவே தோஷம் இருந்ததால் முதலில் வாழை மரத்திற்கு தாலி கட்டி 2ஆவது முறையாக நயன்தாராவுக்கு கட்டிய விக்னேஷ் சிவன் அடுத்து 3ஆவது முறையாக மீண்டும் நயன்தாரா கழுத்தில் தாலி கட்ட வேண்டும் கூறப்படுகிறது.