சின்னத்திரையில் நுழைகிறாரா விக்னேஷ் சிவன்! வெளியான பகீர் தகவல்
நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன், சின்னத்திரை ரிவி நிகழ்ச்சியில் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன்
தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், பின்பு அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். அதில் இவர் எடுத்த நானும் ரௌடி தான் என்ற திரைப்படம் திருப்பு முனையாக இருந்துள்ளது.
ஆம் இப்படத்தில் தான் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், அஜித்தின் 62வது படத்தினை இயக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், ஆனால் அதிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
விக்னேஷ் கூறிய கதை திருப்தி அளிக்காத காரணத்தில் இவரை நீக்கியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அடுத்த படம் எடுப்பதற்கு முயற்சித்து வருகின்றார்.
இந்நிலையில் விக்கி திடீரென சின்னதிரை பக்கம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியைப் போல, வேறொரு தொலைக்காட்சியில், ரிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |