நயன்தாரா புகைப்படத்தை பதிவிட்டு அவரது காதலன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் பணிகள் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நடிகர் விக்னேஷ் சிவன்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே.
நானும் ரௌடி தான் படத்தில் தொடங்கிய பழக்கம் காதலாக மாறியது, தற்போது இதே கூட்டணியை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.
படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நயன்தாராவே டப்பிங் பேசுகிறார், இப்புகைப்படங்களை பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் வசனங்களை.... அதற்கு நீயே டப்பிங் பண்றது மிகுந்த சந்தோஷம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Kanmani anbodu Kaadhalan Naan ezhudhiya dialogues neeyae dub panradhu migundha sandhosham ???☺️?❤️ #KaathuVaakula started dubbing for #KaathuVaakulaRenduKaadhal @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @anirudhofficial @Rowdy_Pictures @7screenstudio @SonyMusicSouth pic.twitter.com/DUmsYFDpQe
— Vignesh Shivan (@VigneshShivN) December 2, 2021