திருமணத்திற்கு பின் அது இல்லையாம்... நயனின் முடிவால் நொந்துபோன விக்னேஷ் சிவன்!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து தனியாக வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இவர்களின் திருமணம் தான் எப்போது என கேள்வி கேட்டு வந்த நிலையில் வருடக்கணக்காக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இருவரும் வெளியிடாமலே இருந்து வந்தனர்.
மேலும் சுற்றுலா செல்வது, கோவில்களுக்குச் செல்வது என அடிக்கடி ஒன்றாக உலா வருகின்றனர். அண்மையில், விக்கி இயக்கத்தில், நயன் நடிப்பில் வெளியான காத்துவாக்குல காதல் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
41 வயதில் கர்ப்பமான நடிகை நமீதா - புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
நயனின் அதிரடி முடிவு
இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன் இவர்களின் திருமண தேதி லீக்காகி ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இதனிடையே தற்போது வெளியான தகவலின் படி, நயன்தாரா திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் செல்லவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதற்கு காரணமாக நயன்தாரா அதிக எடைக் குறைப்பில் ஈடுபட்டதால் அவரது தோல் சுறுங்கி வயதான தோற்றத்தில் காணப்படுகிறாராம்.
அதற்காக, கேரளாவில் சிகிச்சை மேற்கொள்ள உள்ளாராம். மேலும் விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் ஏகே 62 படத்தை இயக்கும் பணியில் ஈடுப்படப்போகிறாராம்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் பலர் இதுக்குமேலயும் ஹனிமூன் என கிண்டலடிக்க மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.