வெறும் 250 ரூபாய் தான் இருந்தது! அனிரூத் செய்த உதவி குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம்
ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், அனிருத் தன் வாழ்வில் செய்த மறக்க முடியாத உதவி குறித்து மேடையில் பகிர்ந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
LIK திரைப்பட விழா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் திரைக்கு வராமல் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
சீமான் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி , கெளரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார்கள்.அனிருத் இசையமைத்துள்ளார்.

அனிருத் செய்த உதவி
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சி என்பன இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
அதில் தனது உரையின் போது, விக்னேஷ் சிவன், அனிருத் செய்த மறக்கவே முடியாத உதவி குறித்து ரசிகர்களுடன் பகிந்துக்கொண்டார்.
அவர் குறிப்பிடுகையில், நானும் ரவுடி தான் படம் பண்ணுவதற்காக பாண்டிச்சேரிக்கு கதை மற்றும் லொகேஷ் பார்க்கச் செல்ல வேண்டும். ஆனால், அப்போது தன்னிடம் பஸ்ஸுக்கு வெறும் 250 ரூபாய் மட்டுமே இருந்தது.

என்ன பண்றதுன்னே தெரியல. பஸ்ல போயிட்டு இருந்தேன். அப்போ, அனி மெஜேஞ் மூலம், விக்கி உன் பேக்ல 50 ஆயிரம் பணம் வச்சிருக்கேன்னு சொன்னதும் அந்த பஸ்ல நான் உட்கார்ந்திருந்த ஜன்னல் கம்பி எல்லாமே கண்ணீரால் நனைந்தது.
அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது அனிருத் என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பரிசு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பலபேர் இருந்த மேடையில் அனிருத் குறித்து பேசியது மாத்திரமன்றி, அனிருத் முன் விக்னேஷ் சிவன் மண்டியிட்டபடி எடுத்த போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் அவர் ஷேர் செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |