நயன்தாராவை அலேக்காக தூக்கிய விக்கி! கடைசியில் இப்படி மூச்சு வாங்க வைச்சிட்டாங்களே?
நடிகை நயன்தாரா தனது இரண்டாவது திருமணநாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், விக்கியை மூச்சு வாங்க வைத்த சம்பவம் ரசிகர்களிடையே பேச்சுப் பொருளாக இருக்கின்றது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜுன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த 3 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். குறித்த குழந்தைகளுக்கு சமீபத்தில் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என பெயர் சூட்டியிருந்தனர்.
சமீபத்தில் தனது மகன்களின் புகைப்படங்களை குறித்த தம்பதிகள் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் தனது இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இத்தருணத்தில் விக்னேஷ் வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நயனை தூக்கிய விக்னேஷ் சிவன்
தனது திருமண நாளில் நயன்தாரா விக்னேஷிற்கு டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ளார். அதாவது நயன்தாராவை அலேக்காக விக்னேஷ் தூக்குவது தான் அந்த டாஸ்க்.
இதனை விக்னேஷ் செய்ததுடன், குறித்த காணொளியினையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள், விக்னேஷ் சிவனை இப்படி மூச்சு வாங்க வைச்சிட்டீங்களே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |