பெண்ணின் தோலுக்கடையில் இருந்த புழுக்கள்... மூளைக்கும் சென்ற சோகம்! நடந்தது என்ன?
வியட்நாமில் பெண்ணின் தோலுக்கு கீழே புழுக்கள் நெளிந்ததுடன், அவருடைய மூளை வரை சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் உடம்பில் புழுக்கள்
வியட்நாமை சேர்ந்த அன் பின்ஹ் பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஹனோய், வீட்டில் இறைச்சியை சமைத்ததுடன், அதன் பச்சை ரத்தத்தை வைத்து டைட் கேன் என்ற உணவையும் சமைத்துள்ளார்.
ஆசையாக புதிதாக சமைத்த உணவையும் அவர் சுவைத்த நிலையில், அதன் பின்பு அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தலைவலி தாங்கமுடியாமல் சென்ற நிலையில் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.
அப்பொழுது ஸ்கேன் ரிப்போர்ட்டில், அவருடைய உடலில் சில இடங்களில் புழுக்கள் உருவாகி நெளிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. கை மற்றும் கால்கள் மட்டுமின்றி மூளையையும் விட்டுவைக்காமல் இந்த புழுக்கள் பிரச்சினையை ஏற்படுது்தியுள்ளது.
தற்போது குறித்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்த நிலையில், உயிர் பிழைத்துள்ளார். இதனால் மருத்துவர்கள் சமைக்காத உணவுகள், பச்சை ரத்தத்தினை சாப்பிடுவதே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.