காமெடி நடிகை வித்யுலேகாவின் காதலர் யார் தெரியுமா? விரைவில் திருமணம்.... வைரலாகும் புகைப்படம்
காமெடி நடிகை வித்யுலேகா ராமனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவர் தன்னுடைய நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டியை அட்டகாசமாக கொண்டாடியுள்ளார்.
இந்த புகைபகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய வைரலாக பார்க்கப்பட்டு, பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார்.
இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார்.
இந்நிலையில் வித்யுலேகா ராமன், கடந்த வருடம் ஃபிட்னெஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தன்னுடைய தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.



